மலை சாலையில் இறங்கிய காட்டு யானை - ரிவர்ஸ் கியரில் ஓட்டம் பிடித்த டிரைவர்
கேரளாவில் மலை சாலையில் மீண்டும் இறங்கிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.;
அதிரப்பள்ளி,
கேரளாவில் மலை சாலையில் மீண்டும் இறங்கிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. அதிரப்பள்ளி பகுதியில் சுற்றி வரும் காட்டு யானை ஒன்று கடந்த 15 தினங்களுக்கும் மேலாக சோலையார் - மலக்கப்பாறை மலைசாலையில் முகாமிட்டுள்ளது.
கபாலி எனப்படும் இந்த யானையானது நேற்று பேருந்துக்கு வழிவிடாமல் சாலையில் சென்றது. இதனால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் பேருந்து யானையின் பின்னாலேயே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதேபோல், இன்று காலை மீண்டும் மலை சாலையில் இறங்கிய கபாலி யானை சுமார் அரை மணி நேரம் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியது. இதனால் டீத்தூள் ஏற்றி வந்த லாரி, கார், பேருந்து உட்பட பல வாகனங்கள் பின்னோக்கி இயக்கப்பட்டன.