ரூ.23 கோடியில் பையப்பனஹள்ளியில் அதிநவீன கட்டுப்பாட்டு மையம்

பெங்களூருவில் டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்காக பையப்பனஹள்ளியில் அதிநவீன கட்டுப்பாட்டு மையம் ரூ.23 கோடியில் அமைக்கப்பட உள்ளது.

Update: 2023-05-28 21:53 GMT

பெங்களூரு:-

மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

பெங்களூருவில் கடந்த 12 ஆண்டுகளாக மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மெட்ரோ ரெயில் சேவையை விரிவுப்படுத்தும் பணிகள் நகரில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் தற்போது 57 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களின் இயக்கத்தை ஒரே கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயில்களை இயக்க பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது. பழைய வழித்தடத்திலும், புதிய வழித்தடத்திலும் டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு அதிநவீன கட்டுப்பாட்டு மற்றும் செயல்பாட்டு மையம் தேவைப்படுகிறது.

ரூ.23 கோடி செலவில் கட்டுப்பாட்டு...

இதையடுத்து, பையப்பனஹள்ளியில் அதிநவீன கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மையம் அமைப்பதற்காக ரூ.23 கோடி செலவு செய்யப்படுகிறது. 5 மாடிகளை கொண்டதாக இந்த மையம் அமைய உள்ளது. தற்போது 2 மாடிகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் நிறைவு பெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு, அதிநவீன தொழில் நுட்பம், எலெக்ட்ரானிக் பணிகள் நடைபெற உள்ளது. அதாவது கண்காணிப்பு மையம் உள்ளிட்ட தொழில் நுட்ப வசதிகள் அந்த கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட இருக்கிறது. டிரைவர்கள் இல்லாத மெட்ரோ ரெயில்களை நிர்வகிக்க தனியான கட்டுப்பாட்டு மையம் அவசியமாகும். புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் போது, இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தான் இயக்கப்படும் என்று பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாக உயர் அதிகாரி யஷ்வந்த் சவுகான் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்