வலசை போன யானை கூட்டம்; துரத்த சென்ற கும்பலை ஓட, ஓட விரட்டிய ஒற்றை காட்டு யானை: வைரலான வீடியோ

அசாமில் யானை கூட்டம் வலசை போனபோது, அவற்றை துரத்த சென்ற மக்களை ஒற்றை காட்டு யானை ஓட, ஓட விரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2022-11-30 06:53 GMT



கோல்பாரா,


அசாமில் கோல்பாரா மாவட்டத்தில் ராங்ஜூலி பகுதியில் குடியிருப்பு பகுதியை ஒட்டிய விளைநில பகுதிகளுக்குள் யானை கூட்டம் ஒன்று நுழைந்துள்ளது என கூறப்படுகிறது.

அருகேயுள்ள வன பகுதியில் இருந்து வெளியேறிய இந்த யானை கூட்டம் விளைநில பகுதியிலேயே தங்கி வலசை போய் வருகிறது. இதனால், நெற்பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை இந்த யானை கூட்டம் விளைநில பகுதியில் வலசை போயுள்ளது. இதனை பார்த்த அந்த பகுதியில் வசிப்பவர்களில் சிலர் கும்பலாக யானைகளை விரட்ட சென்றுள்ளனர்.

உடனே, யானை கூட்டம் அருகேயிருந்த வன பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டபோதும், ஒரேயொரு யானை மட்டும் மக்களின் முன்பு நின்று கொண்டு இருந்தது. இதனால், இளைஞர்கள் தைரியமுடன் அதனை நோக்கி கும்பலாக முன்னேறி விரட்டினர்.

இதன் பின்னர், அந்த யானையும் மரங்களுக்கு உள்ளே சென்றது. எனினும், சிறிது நேரத்தில் மரங்களின் உள்ளே இருந்து, காட்டு யானை ஒன்று கும்பலை நோக்கி விரைவாக முன்னேறியது. இதனால், யானையை விரட்ட சென்ற கும்பல் அலறியடித்து திரும்பி ஓடி வந்தது.

பொதுவாக யானைகள் பல ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு உணவை தேடி வன பகுதியில் பயணிப்பது வழக்கம். எனினும், வன அழிப்பு, காட்டுக்குள் போதிய உணவின்மை, வறட்சி போன்ற காரணங்களால் ஊருக்குள் அவை வருவது அதிகரித்து வருகிறது.

யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பும் அவற்றின் பயணதிசையில் மாற்றம் ஏற்படுத்தி, காட்டை விட்டு ஊருக்குள் வரும் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், உணவு தேடி ஊருக்குள் வந்த யானைகளை விரட்ட சென்ற கும்பலை காட்டு யானை ஒன்று விரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்