ஓடும் காரில் தீ விபத்து

சிக்கமகளூரு அருகே ஓடும் காரில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-07 18:45 GMT

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் டிரைவர் உள்பட 3 பேர் பயணித்தனர். அந்த கார் கல்யாண் நகர் அருகே சென்றபோது திடீரென தீபிப்டித்தது. இதனால் கரும்புகை வெளியேற தொடங்கியது. அப்போது சுதாரித்து கொண்டவர்கள் காரில் இருந்து கீழே இறங்கி தப்பித்தனர். சிறிது நேரத்தில் காரின் முன்பகுதியில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதை கண்ட அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக தீயணைப்பு வாகனங்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், காரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி அணைத்தனர். மேலும், தீ விபத்து மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்தனர்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிக்கமகளூரு டவுன் போலீசார் வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், காரில் சென்றவர்கள் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா வந்துவிட்டு காரில் பெங்களூரு நோக்கி சென்றபோது காரில் கோளாறு ஏற்பட்டு தீவிபத்து நடந்ததும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்