சபரிமலைக்கு நவம்பர் மாதத்தில் 8.74 லட்சம் பக்தர்கள் வருகை - திருவிதாங்கூர் தேவசம்போர்டு தகவல்

சந்நிதானம் திறக்கப்பட்ட நாள் முதல் நவம்பர் 30-ந்தேதி வரை 8.74 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்ததாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

Update: 2022-12-03 14:47 GMT

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வருகை தருகின்றனர். தற்போது தினமும் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதற்காக ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக 13 இடங்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சந்நிதானம் திறக்கப்பட்ட நாள் முதல் நவம்பர் 30-ந்தேதி வரை 8.74 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்ததாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 1 மற்றும் 2-ந்தேதியை சேர்த்து சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்