ஐதராபாத் கல்லூரியில் 'ராக்கிங்' வழக்கில் 8 மாணவர்கள் கைது

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் வணிக படிப்புகளுக்கான கல்லூரி உள்ளது.

Update: 2022-11-15 20:15 GMT

ஐதராபாத், 

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் வணிக படிப்புகளுக்கான கல்லூரி உள்ளது. அங்கு விடுதியில் தங்கி படிக்கும் ஒரு மாணவர், கடந்த மாதம் சமூக வலைத்தள உரையாடலில் தகாத கருத்துகளை பதிவு செய்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஒரு மாணவி, தன்னுடைய சக மாணவர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் அந்த மாணவர்கள், தகாத கருத்து தெரிவித்த மாணவரின் அறைக்கு சென்று அவரை தாக்கினர். இதுபற்றி அந்த மாணவர், கல்லூரி நிர்வாகத்திடமும், சில அரசு அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தார். நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், போலீசில் புகார் செய்தார். போலீசார், 'ராக்கிங்' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 8 மாணவர்களை கைது செய்தனர். 2 மாணவர்களை தேடி வருகிறார்கள். பிரச்சினையை கண்டு கொள்ளாத கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்