74-வது குடியரசு தினவிழா: டெல்லி கடமை பாதையில் தேசிய கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

நாட்டின் 74-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்

Update: 2023-01-26 05:06 GMT

புதுடெல்லி,

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா நடைபெற்றது.

விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கடமையின் பாதையை ஒட்டி இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ள கடமையின் பாதை விஜய் சவுக் ஜனாதிபதி மாளிகை சந்திப்பு பகுதிக்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து கடமையின் பாதைக்கு வருகை தந்த ஜனாதிபதி பிரதமர் மோடி வரவேற்றார.

பின்னர், டெல்லி கடமை பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்முதேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி கொடி ஏற்றி கொடிவணக்கம் செலுத்தியவுடன் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கிது.

Tags:    

மேலும் செய்திகள்