7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை

இளம்பெண் பலாத்கார வழக்கில் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2023-02-01 20:20 GMT

கொள்ளேகால்:-

காதல்

சாம்ராஜ்நகர் டவுனை சேர்ந்தவர் முகமது மினஜ் கான். இவர் அந்தப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அவர்கள் 2 பேரும் நெருக்கமாக இருந்தனர். அதனை முகமது மினஜ் கான், செல்போனில் படம் எடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணை முகமது மினஜ் கான், உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் முகமது மினஜ் கான், அந்த படங்களை காண்பித்து தன்னுடம் உல்லாசமாக இருக்காவிட்டால் அதனை வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன அவர், உல்லாசமாக இருக்க சம்மதித்தார்.

இந்த நிலையில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தததை முகமது மினஜ்கான், தனது நண்பர்களான சல்மான்கான், ஷாருக்கான், வகித் அகமது, முகமது அமீர், முஸ்தாபின்கான், சையத் உமர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டு சிறை

இந்த நிலையில் சையத் உமர் என்பவர், இதுபற்றி இளம்பெண்ணிடம் கூறி அவரை மிரட்டி கற்பழித்துள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் சாம்ராஜ்நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது மினஜ் கான், சையத் உமர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த சல்மான்கான், ஷாருக்கான், வகித் அகமது, முகமது அமீர், முஸ்தாபின்கான் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது.

இதுதொடர்பான வழக்கு சாம்ராஜ்நகர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதில், 7 பேர் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்