5ஜி அலைக்கற்றை ஏலம் : 3-வது நாள் முடிவில் ரூபாய் 1.49 லட்சம் கோடியைத் தாண்டியது

3-வது நாள் முடிவில் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் 1,49,623 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

Update: 2022-07-28 15:43 GMT

Image Courtesy : AFP 

புதுடெல்லி,

இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் '5ஜி' என்று அழைக்கப்படுகிற 5-ம் தலைமுறை தொலைதொடர்புச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான செயல்திறனை வழங்க உறுதி அளிக்கிறது.

இந்த தொலை தொடர்புச்சேவையின்கீழ் இணையதளம் அதிவேகமாக செயல்படும். குறிப்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள 4-ஜி தொலைதொடர்புச் சேவையின் இணையதள வேகத்தை விட இந்த 5ஜி தொலைதொடர்புச்சேவை இணையதள வேகம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் தற்போது ஆன்லைனில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 3 தினங்களாக ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடஃபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

முதல் நாள் ஏலத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்து இருந்தது. நேற்று 2-ஆம் நாள் முடிவில் இந்த தொகை 1,49,454 கோடி ரூபாய் வரை கேட்கப்பட்டது. அதை தொடந்து இன்று 3-வது நாள் ஏலம் முடிவடைந்துள்ளது. 3-வது நாள் முடிவில் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் 1,49,623 கோடி ரூபாயை எட்டியுள்ளது. 4-வது நாள் ஏலம் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்