கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடி செலவு
கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்காக பஸ்கள் என பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.
இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் சுமார் ரூ.440 கோடியை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு தொகுதிக்கு மட்டும் ரூ.1.96 கோடியை தேர்தல் ஆணையம் செலவு செய்திருக்கிறது.