கர்நாடகத்தில் கடந்த ஆண்டில் வனவிலங்குகள் தாக்கியதில் 41 பேர் சாவு; மந்திரி மாதுசாமி தகவல்

கர்நாடகத்தில் கடந்த ஆண்டில் வனவிலங்குகள் தாக்கியதில் 41 பேர் உயிரிழந்தனர் என்று மந்திரி மாதுசாமி தகவல்.

Update: 2023-02-23 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று மேல்-சபையில் உறுப்பினர்களான ஆ.தேவேகவுடா, சி.எஸ்.மஞ்சேகவுடா ஆகியோர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி பேசியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2022) யானை, சிறுத்தை, புலி, முதலை, காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கியதில் 41 பேர் பலியாகி இருக்கிறார்கள். வனவிலங்குகள் தாக்கி பலியாகும் நபர்களுக்கு அரசு சார்பில் முதலில் ரூ.7½ லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது அது ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல், யானை உள்ளிட்ட விலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டாலும், அதற்காக வழங்கும் நிவாரணமும் 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பணியின் போது உயிரிழக்கும் வனத்துறையினருக்கு வழங்கப்படும் நிதி ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வனவிலங்குகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையில் 2,569 பணி இடங்கள் காலியாக உள்ளன. புதிதாக 506 பணி இடங்களை நியமிக்கும் பணிகள் நடந்து வருகிறது. காலி பணி இடங்கள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்