அந்தமானில் 4-வது முறையாக நிலநடுக்கம்
அந்தமான் நிக்கோபர் தீவில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிக்கோபர்,
அந்தமான் நிக்கோபர் தீவில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இன்று மதியம் 2.59 மணியளவில் நிக்கோபர் தீவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு மீண்டும் அந்தமானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. நான்காவது முறையாக 5.5 ஆக பதிவாகியுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் 5-ம் தேதி போர்ட்பிளேருக்கு கிழக்கு வடகிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவில் இரவு 10.47 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த்