கர்நாடகத்தில் புதிதாக 368 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 368 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-20 21:09 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 23 ஆயிரத்து 969 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 368 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 220 பேருக்கும், ராமநகரில் 30 பேருக்கும், உடுப்பியில் 3 பேருக்கும், குடகில் 34 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் 500 பேர் குணம் அடைந்தனர். 3 ஆயிரத்து 434 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.53 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை கர்நாடக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்