2017-2021 ஆண்டுகளுக்கிடையே 35,493 வரதட்சணை இறப்புகள் பதிவாகியுள்ளன - மத்திய அரசு தகவல்

2017-2021 ஆண்டுகளுக்கிடையே 35,493 வரதட்சணை இறப்புகள் பதிவாகியுள்ளன என்று மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-14 18:58 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

கடந்த 2017-2021 ஆண்டுகளுக்கிடையே இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 20 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும் உத்தரப் பிரதேசத்தில் தினசரி ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன.

ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் குமார் மிஸ்ரா பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 2017 முதல் 2021 ஆண்டுகளுக்கிடையே இந்தியாவில் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன.

2017-ம் ஆண்டில், 7,466 வரதட்சணை மரணங்களும் 2018-ல் 7,167 மரணங்களும் 2019-ல் 7,141 மரணங்களும் பதிவாகியுள்ளன. மேலும் 2020-ல் 6,966 மரணங்களும் 2021-ல் 6,753 வரதட்சணை மரணங்களும் பதிவாகியுள்ளன.

அந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 11,874 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும் பீகாரில் 5,354, மத்தியப் பிரதேசத்தில் 2,859, மேற்கு வங்காளத்தில் 2,389 மற்றும் ராஜஸ்தானில் 2,244 வரதட்சணை மரணங்கள் நடந்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்