பருவமழைக்கு 2,038 பேர் பலி உள்துறை அமைச்சகம் தகவல்
பருவமழைக்கு 2,038 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் நடப்பு பருவமழை காலத்தில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 17-ந் தேதி வரை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்குதலில் 2 ஆயிரத்து 38 பேர் பலியாகி இருக்கின்றனர். அவர்களில் 892 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், 506 பேர் மின்னல் தாக்கியும், 186 பேர் நிலச்சரிவில் சிக்கியும் உயிரைப் பறிகொடுத்திருக்கின்றனர். மேலும் 454 பேர், மழை தொடர்பான வேறு பல சம்பவங்களில் பலியாகி உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.