டெல்லி தீ விபத்து: பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு

டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 லிருந்து 30 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-05-14 08:51 GMT
புதுடெல்லி,

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 4 மாடி வணிக கட்டிடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் இதுவரை மொத்தம் 27 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.  

12 பேர் காயமடைந்து உள்ளனர்.  50 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன பலரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பலியானவர்களில் 25 பேரின் உடல்களை இன்னும் அடையாளம் காணப்படவில்லை.



இந்த நிலையில் தீ விபத்துக்கு பிறகு 3 மாடி கட்டிடத்தில் இருந்த 19 பேரை காணவில்லை எனறு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தீயில் கருகி பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.




காணாமல் போனவர்கள் அங்கிருந்து தப்பி குதித்து சென்றார்களா, அவர்களது நிலை என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



இதற்கிடையே தீ விபத்து நடந்த கட்டிடத்தில் உள்ள 2 கம்பெனியின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.




மரணம் விளைவிக்கும் வகையில் குற்றத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.



இதற்கிடையே அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மனிஷ் லகரா தப்பி ஓடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர் கட்டிடத்திற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்