அசாம்: அரசு செய்தித்தாள் முதல் பதிப்பினை வெளியிட்டார் மந்திரி அமித்ஷா
அசாமில் அரசு செய்தித்தாளின் முதல் பதிப்பினை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வெளியிட்டு உள்ளார்.
கவுகாத்தி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அசாமில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கடந்த 8ந்தேதி கவுகாத்தி விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர், அம்மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா அரசின் ஓராண்டு நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுவார். இதேபோன்று, கவுகாத்தியில் நடக்கும் விழாவில் பங்கேற்று அசாம் காவல் துறைக்கு அமித்ஷா விருது வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. மேலும், வங்காள தேசம் எல்லைப்பகுதிக்கும் பயணம் செய்ய உள்ளார்.
இந்த நிலையில், அசாமில் அரசு செய்தித்தாளின் முதல் பதிப்பினை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வெளியிட்டு உள்ளார். அசோம் பர்தா என்ற பெயரிலான அந்த செய்தித்தாளானது அரசின் கொள்கைகள் மற்றும் அவற்றின் அமலாக்கம் ஆகியவற்றோடு மக்களை ஒன்றாக இணைந்து செல்ல செய்யும்.
முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் ஓராண்டு அரசாட்சியின் நிறைவு கொண்டாட்டத்தின்போது, இந்த செய்தித்தாள் வெளியீடும் சேர்ந்து நடந்துள்ளது.
இந்த செய்தித்தாள் 4 மொழிகளில் அச்சிடப்படும். அசாம், ஆங்கிலம், இந்தி மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் (வருகிற மாதங்களில்) பல்வேறு மரபுசார்ந்த மற்றும் சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி பரவலாக வெளியிடப்பட்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.