மாப்பிள்ளை இந்த உடை அணியக்கூடாது? - பெண் வீட்டார் எதிர்ப்பால் அடிதடியில் முடிந்த திருமணம்...!
திருமண சடங்கின் போது பாரம்பரிய முறைப்படை உடை அணியாததால் மணமகன்-மணப்பெண் குடும்பத்தினர் இடையே மோதல் வெடித்தது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் தஹர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தர்லால் என்ற நபருக்கு அதேமாவட்டம் மெங்க்படா கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று முன் தினம் நடைபெறுவதாக இருந்தது.
திருமணம் பெண் வீட்டில் வைத்து நடைபெற்று வந்தது. அப்போது, திருமண நேரம் நெருங்கிய நிலையில் மணமேடைக்கு மணமகனும், மணமகளும் வந்துள்ளனர்.
அப்போது, பெண் வீட்டாரின் பாரம்பரிய முறைப்படி மணமகன் டொடி-குர்தா என்ற உடையை அணிந்து தான் மணமேடையில் அமர்ந்து திருமண சடங்கு மற்றும் தாலிக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும். ஆனால், மணமகன் சுந்தர்லால் டொடி-குர்தா அணியாமல் ஷர்வானி என்ற உடையை அணிந்துள்ளார்.
இதனால், திருமணத்தில் பங்கேற்ற பெண் வீட்டார் மாப்பிள்ளை டொடி-குர்தா அணிந்து தான் மணமேடையில் அமர்ந்து திருமண சடங்கில் பங்கேற்று பெண்ணுக்கு தாலிகட்ட வேண்டுமென கூறினார். இதற்கு மாப்பிள்ளை சுந்தர்லால் மற்றும் அவரது தரப்பினர் இந்த உடையிலேயே திருமண சடங்கில் பங்கேற்லாம் என்றனர். இதனால், பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே மணமேடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பெண் வீட்டாரும், மாப்பிளை வீட்டாரும் ஒருவர் மீது ஒருவர் கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர்.
இறுதியில் சனிக்கிழமை திருமணம் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இரு வீட்டாரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
ஆனால், மணப்பெண்ணின் பெற்றோரும், மணமகனின் பெற்றோரும் சமாதானமடைந்ததால் ஞாயிற்றுக்கிழமை சுந்தர்லால் - மணப்பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.