அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் பிரதமர் நரேந்திரமோடி சொல்வார்:- ராகுல்காந்தி கிண்டல்

இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், மோடி அரசு 4.8 லட்சம் என பொய் சொல்கிறது. என ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2022-05-06 07:06 GMT
புதுடெல்லி

வியாழன் அன்று உலக சுகாதார அமைப்பு  1.49 கோடி  மக்கள் கொரோனாதொற்றுநோயின் தாக்கம் காரணமாக=பலியாகி உள்ளனர். இந்தியாவில் 47  லட்சம் கொரோனா  இறப்புகள் பதிவாகி உள்ளன என கூறியது.  இது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில்  உலகளவில் கொரோனா இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். ஆனால் இதனை  இந்தியா கடுமையாக மறுத்து உள்ளது. 

இது குறித்து அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் பிரதமர் நரேந்திரமோடி பொய் சொல்வார் என காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், மோடி அரசு  4.8 லட்சம் என பொய் சொல்கிறது.  என ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டில்  "கொரோனா  தொற்றுநோயால் 47 லட்சம் இந்தியர்கள் இறந்துள்ளனர். அரசு கூறுவது போல் 4.8 லட்சம் இல்லை. அறிவியல் பொய் சொல்லாது. ஆனால் மோடி கூறுகிறார்".அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு மதிப்பளித்து  அவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி உள்ளார். 


மேலும் செய்திகள்