பொதுசிவில் சட்டம் வேண்டுமென அனைவரும் விரும்புகின்றனர்; அசாம் முதல் - மந்திரி
எந்த இஸ்லாமிய பெண்ணும் தனது கணவர் மற்ற 3 மனைவிகளையும் வீட்டிற்கு அழைத்து வருவதை விரும்பவில்லை என அசாம் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி,
அனைவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டுவர பல்வேறு மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய பல்வேறு மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசுகையில், பொது சிவில் சட்டம் வேண்டுமென அனைவரும் விரும்புகின்றனர். எந்த இஸ்லாமிய பெண்ணும் தனது கணவர் மற்ற 3 மனைவிகளையும் வீட்டிற்கு அழைத்து வருவதை விரும்பவில்லை. எந்த இஸ்லாமிய பெண்ணிடமும் கேளுங்கள். பொது சிவில் சட்டம் என் பிரச்சினை இல்லை, இது அனைத்து இஸ்லாமிய பெண்களுக்கான பிரச்சினை. முத்தலாக் சட்டம் ஒழிக்கப்பட்ட பின்னர் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படவேண்டும்’ என்றார்.