இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை, மே 19-ந்தேதிக்கு தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை, மே 19-ந்தேதிக்கு தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
மருத்துவ மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இதன்படி, நேற்று நடந்த விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் பி.தத்தர், ‘நீட்’ முதுநிலை தேர்வு மே 23-ந் தேதி நடைபெறுகிறது, தேர்வு முடிவுகள் மே 30-ந்தேதி வெளியாகும்’ என வாதிட்டார்.
இதற்கு, நீதிபதிகள் ரிட் மனுக்களை மே 19-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.