பள்ளிகளுக்கான கட்டுப்பாட்டு மையம் - பிரதமர் மோடி நேரில் ஆய்வு
காந்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்.
காந்தி நகர்,
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். முதல் நாள் நிகழ்வாக காந்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த மையமானது ஆண்டுதோறும் 500 கோடிக்கும் மேற்பட்ட மேற்பட்ட புள்ளி விவரங்களை சேகரிப்பதுடன் மாணவர்களின் ஒட்டுமொத்த கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக அவற்றை பகுப்பாய்வு செய்து பயனுள்ள வகையில் பெரிய அளவிலான தரவு பகுப்பாய்வு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்றவற்றிற்கு பயன்படுத்த உதவும்.
அதுபோல, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தினசரி ஆன்லைன் வருகைப்பதிவை கண்காணிக்கவும் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்யவும் இந்த பள்ளிகளுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் சிறந்த நடைமுறை என்று உலக வங்கியால் பாராட்டப்பட்டுள்ளது.