இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் பதிவு

நாடு முழுவதும் தற்போது 11,191 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-04-15 04:06 GMT
புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,088 பேருக்கும், நேற்று 1,007 பேருக்கும் கொரோனா உறுதியாகி இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக குறைந்துள்ளது. 

இதன் மூலம் இந்தியாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4,30,39,972 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,21,743 ஆக அதிகரித்துள்ளது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 810 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,25,07,038 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 11,191 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் ஒரே நாளில் 6,66,660 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 186.30 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்