சுங்கக் கட்டண தகவல்களை முன்கூட்டியே அறியும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது கூகுள் மேப்...!
சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல்களை முன்கூட்டியே அறியும் வசதியை கூகுள் மேப் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
புதுடெல்லி,
இது குறித்து கூகுள் மேப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாலைகளில் வாகனங்களை ஒட்டிச் செல்லும்போது எவ்வளவு ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல்களை முன்கூட்டியே அறியும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
காரில் பயணிக்கும் பயணர்கள், புறப்படும் இடம் மற்றும் சென்று சேர வேண்டிய இடத்தை கூகுள் மேப்பில் குறிப்பிட்டால், சுங்கக் கட்டணம் எவ்வளவு என்ற விவரங்களை பெறலாம்.
உள்ளூர் சுங்கக் கட்டணம் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கூகுள் மேப் இவற்றை வழங்குகிறது.
கட்டணமில்லா வழிகளைக்கூட அடையாளம் கண்டு அதில் பயணிக்கவும் கூகுள் மேப்பின் புதிய அப்டேட் வழி செய்யவுள்ளது. இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த புதிய அம்சம் வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் மேப்பின் இந்த புதிய அம்சம் எப்ரல் 15-ம் தேதிக்கு மேல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.