இந்தியாவில் 2 நாட்களுக்கு பின் மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு இன்று அதிகரித்துள்ளது.

Update: 2022-04-06 04:16 GMT
Image Courtesy: PTI
புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக (நேற்று 795, நேற்று முன்தினம் 913) தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் பதிவான நிலையில் தற்போது பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. 

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 198 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 97 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 871 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது. 

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 185 கோடியே 4 லட்சத்து 11 ஆயிரத்து 569 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்