டெல்லியில் புதிதாக 114 பேருக்கு கொரோனா; 96 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 18,65,215 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,153 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,38,553 ஆக அதிகரித்துள்ளது.