அடுத்த 100 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநில இளைஞர்களுக்கு அரசு வேலை - உ.பி. அரசு உத்தரவு

அடுத்த 100 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநில இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தேர்வு வாரியத்துக்கு உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-03-31 17:03 GMT
கோப்புப்படம்
லக்னோ,

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் அடுத்த 100 நாட்களில் 10,000க்கும் மேற்பட்ட மாநில இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தேர்வு வாரியத்துக்கு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டரில், “இளைஞர்களை இணைத்து, அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. அடுத்த 100 நாட்களில், மாநிலத்தைச் சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, அரசு வேலை வழங்க, அனைத்து சேவைகள் தேர்வு வாரியத்துக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக தேர்வு வாரிய தலைவர்களுடனான கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் இந்த உத்தரவை பிறப்பித்தார். ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்தவும், நிலுவைகளை நீக்கவும், புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவில் தொடங்கவும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்