மும்பை பங்குச்சந்தை வர்த்தக நிலவரம்!
இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகின்றன.
மும்பை,
இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகின்றன.
அதன்படி, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 250 புள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்து 57,323 ஆகவும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 69 புள்ளிகள் குறைந்து 17,149 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இன்று பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் அண்ட் கேஸ் குறியீடுகளை தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன.மற்ற அனைத்து குறியீடுகளும் 1 சதவீதத்துக்கும் கீழ் சரிவில் காணப்படுகின்றன.
நிப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட குறியீடுகள் லாபத்துடனும், இதே ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி லைப், ஹெச்.டி.எப்.சி வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், யுபிஎல் உள்ளிட்ட குறியீடுகள் நஷ்டத்துடனும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், மாருதி சுசுகி, ஐடிசி, ரிலையன்ஸ், சன் பார்மா உள்ளிட்ட குறியீடுகள் லாபத்துடனும், இதே ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், கோடக் மகேந்திரா, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் நஷ்டத்துடனும் உள்ளன.
இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமில்லாமல் தொடங்கியிருந்தாலும், தற்போது 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 318.33 புள்ளிகள் குறைந்து, 57,043 புள்ளிகளாகவும், நிஃப்டி 83.1 புள்ளிகள் குறைந்து, 17,069.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.