மதராசாக்களை மூட கோரிக்கை விடுத்த எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்

இஸ்லாமிய மத கல்வியை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனமான மூடவேண்டும் என்று கோரிக்கைவிடுத்த எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-26 00:33 GMT
அகர்டலா,

திரிபுரா மாநிலம் தாலை மாவட்டம் ஜவ்மெனு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஷம்பு லால் ஜக்மா. இவர் கடந்த 22-ம் தேதி அம்மாநில சட்டசபையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்றார். 

அப்போது பேசிய அவர், பயங்கரவாதிகள், தேச விரோத சக்திகளை உருவாக்குவதால் திரிபுராவில் உள்ள இஸ்லாமிய மத கல்வியை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனமான மதராசாக்கள் அனைத்தையும் மூடவேண்டும்’ என்று கூறினார்.

இந்நிலையில், மதராசா குறித்து கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ. ஷம்பு லாலு ஜக்மாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மதராசாவை மூடவேண்டும் என்று கோரிக்கை வைத்ததற்கு ஷம்பு குத்திக்கொலை செய்யப்படுவார் என்று ஒரு நபர் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, அடையாளம் தெரியாத அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்