ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் போலீஸ்காரர் உயிரிழப்பு !

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-03-22 17:55 GMT
image credit: ndtv.com
ஜம்மு-காஷ்மீர்,

ஸ்ரீநகரில் உள்ள சௌரா பகுதியில் உள்ள சூனிமர் பகுதியில் 3 பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அமீர் ஹெசேன் என்ற காவலர் படுகாயமடைந்தார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள்  அதிகரித்துள்ளது. புட்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்