மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மைத்துனரிடம் அமலாக்கத்துறை விசாரணை! ரூ.6.45 கோடி சொத்துக்கள் முடக்கம்

பணமோசடி வழக்கில் அவரது சொத்துக்களில் ரூ.6.45 கோடியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. .

Update: 2022-03-22 13:46 GMT
மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின்  மைத்துனரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. மேலும்,  உத்தவ் தாக்கரேவின் மைத்துனருக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அமலாக்கத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் பணமோசடி செய்ததாக தெரியவந்தது. இதனையடுத்து, அவரது சொத்துக்களில் ரூ.6.45 கோடியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை குறித்த முழு தகவல் இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக, வருமான வரித்துறையினர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் சிவசேனாவை சேர்ந்த அனில் பராப் ஆகியோருக்கு நெருங்கிய நபர்களுடைய அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்காளம் மற்றும் மராட்டிய மாநிலங்களை மத்திய அரசு குறிவைத்து சோதனைகளை நடத்துகிறது என்று 2 வரங்களுக்கு முன்னர் சிவசேனா குற்றம்சாட்டியது. 

இந்த நிலையில், இப்போது சிவசேனாவின் மற்றொரு முக்கிய நபரான உத்தவ் தாக்கரேவின் மைத்துனர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்