ஏழைகளை நசுக்கும் விலைவாசி உயர்வு - ராகுல் காந்தி
நாட்டில் விலைவாசி உயர்ந்து வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:- விலைவாசி உயர்வு என்பது அனைத்து இந்தியர்கள் மீதான வரியாக அமைந்துள்ளது. உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பாகவே வரலாறு காணாத விலைவாசி உயர்வு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை நசுக்கியது.
கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர் (சுமார் ரூ.7,500) ஆகி உள்ளது. உணவுப்பொருட்கள் விலை 22 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று, உலகளாவிய வினியோக சங்கிலியை சீர்குலைக்கிறது. மத்திய அரசு இப்போது செயல்பட்டு, மக்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.