5 மாநில தேர்தலில் படு தோல்வி: காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.

Update: 2022-03-12 10:12 GMT
கோப்பு படம் (பிடிஐ)
புதுடெல்லி,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.  குறிப்பாக ஆட்சியில் இருந்த பஞ்சாபிலும் ஆட்சியை பறிகொடுத்தது. படு தோல்வியை சந்தித்ததோடு, அக்கட்சியின் வாக்கு சதவிகிதமும் குறைந்து இருப்பது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பரபரப்பான சூழலில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூடுகிறது. நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் 5 மாநில தேர்தலில் தோல்வி ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்