மணிப்பூர் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 28.19 சதவீத வாக்குகள் பதிவு!!
மணிப்பூர் இறுதிக்கட்ட சட்டமன்றத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இம்பால்,
60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், மீதி உள்ள 22 தொகுதிகளுக்கான இரண்டாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 8.38 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு காலை 11 மணி நிலவரப்படி 28.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.