உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணையக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்படவில்லை - வெளியுறவுத்துறை

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிக்கவில்லை என இந்திய வெளியுறவுத்துறை கூறி உள்ளது.

Update: 2022-03-03 04:35 GMT
புதுடெல்லி

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இந்திய மாணவர்கள்  பணையக்கைதிகளாக கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பது குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

வெளியுறவுத்துறை  அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-

மாணவர்கள் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக  எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. கார்கிவ் மற்றும் அண்டை பகுதிகளில் இருந்து நாட்டின் மேற்குப் பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு ரெயில்களை ஏற்பாடு செய்வதில் உக்ரைன் அதிகாரிகளின் ஆதரவை நாங்கள் கோரியுள்ளோம். 

உக்ரைனில் உள்ள எங்கள் தூதரகம் உக்ரைனில் உள்ள இந்திய பிரஜைகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, பல மாணவர்கள் நேற்று கார்கிவ்வை விட்டு வெளியேறியுள்ளனர் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்