ஆப்ரேஷன் கங்கா திட்டம்: மார்ச் 9-ம் தேதிக்குள் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளது - மத்திய அரசு

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

Update: 2022-03-02 10:50 GMT
புதுடெல்லி,

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர்.  மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.  

தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மார்ச் 9-ம் தேதிக்குள் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி மார்ச் 5-ல் 3 விமானங்களையும், மார்ச் 6, 7, 8 தேதிகள் முறையே ஒரு விமானமும் இயக்கப்படும் மார்ச் 9 ஆம் தேதி ஒரு விமானமும் இயக்கப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று 8 விமானங்களும், நாளை மற்றும் நாளை மறுநாள் முறையே 9 விமானங்களும் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்