உக்ரைன்-ரஷியா போர்: ருமேனியா வழியாக இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி

உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்..

Update: 2022-02-25 07:56 GMT
புதுடெல்லி ,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருவதால் , அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் அச்சத்தில் உள்ளனர் . 

உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.. அவர்களை அழைத்துவர நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம், உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், டெல்லிக்கு திரும்பி வந்து விட்டது.

இந்நிலையில் உக்காரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக  மீட்க மத்திய அரசு  முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது .

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை 2ஏர் இந்தியா விமானங்களை இயக்கப்பட உள்ளதாகவும்,  ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் வழியாக இந்தியர்களை மீட்க மத்திய அரசு  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்