சீக்கிய அமைப்பின் செயலி, இணையதளத்துக்கு தடை..! மத்திய அரசு அதிரடி உத்தரவு!

பஞ்சாப் தேர்தலின்போது பொது அமைதியை கெடுக்க முயன்ற சீக்கிய அமைப்பின் செயலி, இணையதளத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Update: 2022-02-23 02:05 GMT
புதுடெல்லி, 

சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலின்போது, அமைதியை கெடுக்க முயன்ற சீக்கிய அமைப்பின் செயலி, இணையதளத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட ‘சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் என்ற சீக்கிய அமைப்புடன் தொடர்புடைய ‘பஞ்சாப் பாலிடிக்ஸ் டிவி.’ வெளிநாட்டில் இயங்கி வருகிறது.

அந்த டி.வி. சார்பில் செயலிகள், இணையதளம், சமூக வலைத்தள கணக்குகள் இயக்கப்பட்டு வந்தன.பஞ்சாப் சட்டசபை தேர்தலின்போது, பொது அமைதியை கெடுக்க முயற்சிக்கும் வகையில் அந்த செயலிகள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளில் கருத்துகள் இடம்பெற்றன.

இதுதொடர்பாக உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், அந்த செயலிகள், இணையதளம், சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று தடை விதித்தது.

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயலையும் முறியடிப்போம் என்று தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்