உத்தரபிரதேசத்துக்கு ஆட்சி மாற்றம் அவசியம்: மாயாவதி
உத்தரபிரதேசத்துக்கு ஆட்சி மாற்றம் அவசியம் என்று மாயாவதி கூறினார்.
லக்னோ,
உத்தரபிரதேச சட்டசபைக்கு நேற்று 3-ம் கட்ட தேர்தல் நடந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
3-ம் கட்ட தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. அத்துடன், ஆளுங்கட்சியின் அனைத்துவகையான ஏமாற்று வேலைகளில் இருந்து விடுபட ஆட்சி மாற்றமும் அவசியம்.
ஆளுங்கட்சியினரின் தவறான கொள்கைகளால் ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றனர். எனவே, பகுஜன் சமாஜ் கட்சி அளித்த வாக்குறுதி மீது முழு நம்பிக்கை வைப்பதுதான் சரியான வழிமுறை. ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த வேலைகளும் பறிக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்துக்கு வழி செய்வதுதான் இப்போதைக்கு மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.