ஆற்றில் கார் கவிழ்ந்து கோர விபத்து.. மணமகன் உட்பட 9 பேர் பலியான சோகம்!
ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் உள்ள சாம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கோட்டா,
ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் உள்ள சாம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் சௌத் கா பர்வாடாவிலிருந்து காரில் உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மணமகன் உட்பட திருமண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் நயாபுரா கல்வெட்டில் இருந்து கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணமகன் உட்பட காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டா நகர மீட்புப்படையினர் காரிலிருந்து 7 உடல்களையும் தண்ணீரில் இருந்து 2 உடல்களையும் மீட்டனர். அந்த கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.இந்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.