மேற்கு வங்காளத்தில் ஸ்டீல் ஆலையில் விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
மேற்கு வங்காளத்தில் ஸ்டீல் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
பச்சிம் பர்தமான்,
மேற்கு வங்காளத்தின் பச்சிம் பர்தமான் பகுதியில் உள்ள துர்காபூர் ஸ்டீல் ஆலையின் பிராணவாயு பிரிவுக்குள் தொழிலாளர்கள் 7 பேர் சிக்கி கொண்டனர். இதனால், அவர்களால் சுவாசிக்க முடியவில்லை.
இந்த சம்பவத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். 4 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. அவர்கள் டி.எஸ்.பி. மெயின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இதுபற்றிய முதல் கட்ட விசாரணையில், ஆலையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால், தொழிலாளர்கள் 7 பேர் உள்ளே சிக்கி கொண்டனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.