வாரிசு அரசியல்: பிரதமர் கூறியிருப்பது சரியானது, துல்லியமானது - நிதிஷ்குமார்

‘பிரதமர் கூறியிருப்பது சரியானது, துல்லியமானது. கட்சித் தொண்டர்களின் கடும் உழைப்பில் ஒருவர் தனது குடும்பத்தை வளர்ப்பது சோசலிசம் அல்ல.

Update: 2022-02-14 20:43 GMT
பாட்னா, 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அளித்த ஒரு பேட்டியில், அரசியல் கட்சிகளில் சில குடும்பங்களின் ஆதிக்கம், வாரிசு அரசியல் பற்றி கூறினார். அப்போது அவர், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம் பற்றி மறைமுகமாக குறிப்பிட்டார்.

மேலும் அவர், மறைந்த ராம் மனோகர் லோகியா, ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோருடன், தங்கள் கூட்டணியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் வாரிசு அரசியலை வளர்க்கவில்லை என்றார்.

பிரதமரின் இந்த கருத்து குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரிடம் நேற்று செய்தியாளர்களிடம் கேட்டபோது அவர் மகிழ்ச்சியும், பிரதமருக்கு நன்றியும் தெரிவித்தார்.

‘பிரதமர் கூறியிருப்பது சரியானது, துல்லியமானது. கட்சித் தொண்டர்களின் கடும் உழைப்பில் ஒருவர் தனது குடும்பத்தை வளர்ப்பது சோசலிசம் அல்ல. என்னைப் பொறுத்தவரை, ஒட்டு மொத்த பீகாரும் என்னுடைய குடும்பம் தான்’ என்றார் நிதிஷ்குமார்.

மேலும் செய்திகள்