சத்தீஷ்கார் என்கவுண்ட்டர்; சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடனான என்கவுண்ட்டரில் சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழந்து உள்ளார்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் பசகுடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த புத்கல் வன பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, மத்திய ரிசர்வ் போலீசார் (சி.ஆர்.பி.எப்.) அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில், சி.ஆர்.பி.எப்.பின் 168வது பட்டாலியனை சேர்ந்த உதவி தளபதி ஒருவர் உயிரிழந்து உள்ளார். வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார் என பஸ்டார் நகர ஐ.ஜி. சுந்தரராஜ் தெரிவித்து உள்ளார்.