மலையில் சிக்கிய வாலிபரை மீட்டு சாதனை புரிந்த ராணுவ வீரருக்கு பெண்கள் பொட்டு வைத்து வாழ்த்து
மலையில் சிக்கிய வாலிபரை மீட்டு சாதனை புரிந்த ராணுவ வீரரை அங்குள்ள பெண்கள் பொட்டு வைத்து வாழ்த்தினர்.
பாலக்காடு
கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா மலையில் 500 அடி பள்ளத்தில் விழுந்து 2 நாட்கள் உயிருக்கு போராடிய வாலிபரை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அப்படி காப்பற்றிய ராணுவ வீரர்களில் முக்கியமானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
500 அடி ஆழத்தில் கயிற்றில் தொங்கியபடி முதன்முதலாக ஆபத்தில் சிக்கிய வாலிபரை தலையைத் தொட்டு ஆசீர்வதித்து காப்பாற்றியது தமிழ் நாட்டு ராணுவ வீரராகும். வீரரின் பெயர் பாலு என்கிற பாலகிருஷ்ணன். இவர் தமிழ்நாடு திருப்பத்தூரை சேர்ந்தவர்.
இவர் ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்த பகுதி மக்கள் பெரும் பாராட்டு தெரிவித்தனர். தவிர பெண்கள் பொட்டு வைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்கள். தமிழ்ராணுவ வீரரை கேரள மாநில தமிழ் பாதுகாப்பு சங்கபொதுச்செயலாளர் பேச்சுமுத்து பாராட்டி கருத்துதெரிவித்து உள்ளார்.