மணிப்பூரில் பல்வேறு ஊடுருவல் குழுக்களை சேர்ந்த 4 பேர் கைது
மணிப்பூரில் பல்வேறு ஊடுருவல் குழுக்களை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இம்பால்,
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த போலீசாருடன் இணைந்து அசாம் ரைபிள் படையினர் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில், பல்வேறு ஊடுருவல் குழுக்களை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும், போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.