கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது! இன்று 33,538 பேருக்கு தொற்று உறுதி

அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 5,577 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 3,912 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-02-05 14:07 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் ஒரே நாளில் 33,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 5,328 குறைவு. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 5,577 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 3,912 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 1,02,778 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று 28 பேர் பலியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 57,740 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து 58,33,762 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,52,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 32.6 சதவிகிதமாக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 46,813 குணமடைந்தனர்.

மேலும் செய்திகள்