கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், லஞ்சம், ஊழல் இருக்காது: பிரதமர் மோடி உரை

மன் கி பாத் நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடி திருப்பூரில் இளநீர் விற்கும் பெண்ணுக்கு புகழாரம் சூட்டினார்.

Update: 2022-01-30 07:07 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
 
அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகியது. இது 85-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது கூறுகையில்,

"நாம் அனைவரும் நமது கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மக்கள் அனைவரும் விடுமுறை நாளில் குடும்பத்துடன் போர் நினைவிடம் செல்லுங்கள். அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவிடத்தில் உள்ள சுடர் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கொண்ட நாட்டுக்கு சாத்தியம் அற்றது என்று ஏதுமில்லை. இளைஞர்களை கொண்ட நாட்டினால் எதனையும் சாதிக்கமுடியும்.

பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் எனது வாழத்துக்கள். பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் நமது நாட்டின் பாடப்படாத நாயகர்கள். இதுவரை 4.5 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

லடாக்கில் திறந்தவெளி செயற்கை தடகள மைதானம் மற்றும் கால்பந்துமைதானம் அமைக்கப்பட உள்ளது. நாம் நமது கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், லஞ்சம், ஊழல் போன்றவை இருக்காது. எனவே லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்க மக்கள் அனைவரும் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்". இவ்வாறு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். 

மேலும், அவர் உரையாற்றியபோது, திருப்பூரில் இளநீர் விற்கும் பெண்ணுக்கு புகழாரம் சூட்டினார். உடுமலைப்பேட்டையில்  இளநீர் விற்று வரும் தாயம்மாள் என்பவர் அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்பு பணிக்காக ரூ.1 லட்சம் நன்கொடையாக அளித்துள்ளார். தாயம்மாளின் இந்த உன்னத செயலை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்