கொரோனா பரவல் அதிகரிப்பு; டெல்லியில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் நேற்று ஒருநாளில் மட்டும் 331- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று ஒருநாளில் மட்டும் 331- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருவது டெல்லி மக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளதால் டெல்லியில் இரவு ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ள கெஜ்ரிவால், கடந்த 2 தினங்களாக டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 0.5 சதவிகிதமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.