கான்பூர் மெட்ரோ ரெயில் சேவை: நாளை மறுநாள் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

கான்பூர் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் தொடங்கி வைக்க உள்ளார்.

Update: 2021-12-26 12:34 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (டிசம்பர் 28 ஆம் தேதி) கான்பூருக்கு சென்று கான்பூர் மெட்ரோ ரெயில் திட்டத்தின் நிறைவுப் பகுதியைத் திறந்து வைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக கான்பூர் ஐஐடியின் 54வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்துவது பிரதமர் மோடியின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்கிறார். கான்பூரில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் முழு நீளம் 32 கிமீ ஆகும், மேலும் ரூ.11,000 கோடி செலவில் இந்த திட்டம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பினா-பாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 356 கிமீ நீளமுள்ள இந்த திட்டம் ஆண்டுக்கு சுமார் 3.45 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்டது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு ஆலையில் இருந்து கான்பூரில் உள்ள பங்கி வரை நீட்டிக்கப்பட்ட இந்தத் திட்டம் ரூ,1500 கோடிக்கு மேல் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலிய பொருட்களை அணுகுவதற்கு பிராந்தியத்திற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்