ஜெய்ப்பூர்: வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் 24.32 லட்சம் மதிப்புள்ள 4 தங்க கட்டிகள்பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெய்ப்பூர்,
ஷார்ஜாவில் இருந்து ஜெய்ப்பூர் வந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான முறையில் பரிசோதனை செய்தனர்.
அப்போது முகச்சவரம் செய்ய பயன்படும் இயந்திரம் (டிரிம்மர்) வைக்கப்பட்ட அட்டை பெட்டியில் சந்தேகப்படும் வகையிலான பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் தீவிர சோதனை மேற்கொண்டதில், அதில் சிறிய வகையிலான 4 தங்கக்கட்டிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சுங்கச் சட்டம் 1962-ன் படி கடத்தப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தங்கக்கட்டிகள் கடத்தி வந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Rajasthan | Customs Officials at Jaipur International Airport intercepted a passenger who had arrived from Sharjah and seized 5 gold biscuits worth over Rs 24 lakhs. The gold was concealed inside the trimmer. pic.twitter.com/DKCRPvRyT4
— ANI (@ANI) December 25, 2021